Saturday, December 11, 2004

பல்லவியும் சரணமும் - 11

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ...
2. ஆசை தந்த கனவுகள் எல்லாம், என்னால் தான் நனவுகளாகும்...
3. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி...
4. மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? ...
5. கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் ...
6. என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை...
7. ஆற்று மணல் மேடெங்கும் பூ வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே ...
8. தாவி வரும் கையசைவில் விளைந்தது தான் பாவமோ, தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிவது தான் ராகமோ...
9. கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே? ...
10. மாதங்கள் பலவாக உருவானதோ, மகராணி முகம் இன்னும் மெருகேருதோ ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

9 மறுமொழிகள்:

பரணீ said...

1.சங்கீதா மேகம் - உதயகீதம்
7. தேவதை இளம் தேவி - ஆயிரம் நிலவே வா
9. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்

said...

1, சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் உதயகீதம்
2,வெற்றி மீது வெற்றி தேடி வந்த மாப்பிள்ளை
4, கொடுத்த்தெல்லாம் கொடுத்தான் படகோட்டி
10 மலர் கொடுப்பேன் கைகுலுங்க வளையலிட்டேன் திரிசூலம்
ravi srinivas

said...

3. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி... - Keladi Kanmani - Punnagai Mannan

4. மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? ... - Koduthathellaam Koduththaan - Padagotti.

Micham appuram

Suresh

தங்ஸ் said...

5.சின்னமணிக்குயிலே - அம்மன் கோவில் கிழக்காலே
7.தேவதை இளம் தேவி - ஆயிரம் நிலவே வா
8.ஆழியிலே பிறவாத அலைமகளோ - பேசும் தெய்வம்

தங்ஸ் said...

6.நான் காற்று வாங்க - கலங்கரை விளக்கம்

said...

தங்கம்,
8-வது பல்லவி தவறு :-(
8. தாவி வரும் கையசைவில் விளைந்தது தான் பாவமோ, தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிவது தான் ராகமோ... --- அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ, நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல ....

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி!
ஐகாரஸ் பிரகாஷையும், சந்திரவதனாவையும், ஜெயஸ்ரீயையும் காணோமே! என்ன ஆயிற்று?
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

Testing comments' reception by Email!

தங்ஸ் said...

அவங்க மூணுபேரும் வராததால தான்,ஏதோ எனக்கு ரெண்டு பல்லவி கெடச்சது.நன்றி ப்ரகாஷ்,சந்திரவதனா,Jsri..:)

.Net Explorer said...

Bala,

This is my first time visiting your website. I like it a lot. Esp., I enjoyed reading about Vehundu. He is such a sweetheart. When you talk about your grandfather, that reminds me of friend's grandfather who had similar traits. Keep writing.

Anbudan,
Bala aka BalaGanesan
Phoenix, AZ

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails